சுற்றுப்பயணத்தில் வந்த கோரிக்கை - ரூ.50,000 நிதி உதவி வழங்கிய ஈ.பி.எஸ்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 50 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார். ஜெயங்கொண்டம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த எடப்பாடிபழனிசாமியிடம், உத்திராணி பச்சைமுத்து என்ற பெண் தனக்கும், தன் கணவருக்கும் மருத்துவ உதவி வேண்டி கோரிக்கை வைத்தார். இதனை மனுவாக அளிக்கும்படி கூறியிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
