கொளுத்தும் வெயிலில் பள்ளி மாணவர்கள் குடியரசு தின ஒத்திகை

சேலத்தில் கொளுத்தும் வெயிலில் குடியரசு தின ஒத்திகையில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கொளுத்தும் வெயிலில் பள்ளி மாணவர்கள் குடியரசு தின ஒத்திகை
Published on

குடியரசு, சுதந்திர தின கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை காலை நேரங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின ஒத்திகை தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒத்திகையில் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலை தாங்காத ஆசிரியைகள் தங்கள் உடையால் தங்கள் தலையை மூடிக் கொண்டனர். ஆனால், சுடும் வெயிலில், வெறும் காலில் நிற்க முடியாத நிலையிலும் மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டடனர்.

மைதானத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். வெயிலையும், தாகத்தையும் பொருட்படுத்தாமல் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை மாணவ, மாணவிகள் வெற்றிகரமாக செய்து முடித்துனர்.

X

Thanthi TV
www.thanthitv.com