சென்னையில் 1 வருடத்தில் மட்டும்.. வெளியான ரிப்போர்ட்

x

சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு பொருளாதாரக் குற்றங்கள், நில மோசடி, ஆவண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 2024 முதல் ஏப்ரல் 2025 வரை, மத்திய குற்றப்பிரிவில் 1005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 747 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் இருந்த 948 வழக்குகளின் விசாரணை முடிந்துள்ளதாகவும், நீதிமன்ற விசாரணை முடிவடைந்து, 121 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்