பாம்பன் புதிய பாலத்தில் பழுது - திடீரென நிறுத்தப்பட்ட ரயில்கள்- பயணிகள் அவதி
ராமேஸ்வரம் புதிய பாம்பன் பாலம் பழுதானதால், ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பாம்பன் புதிய பாலத்தில் பராமரிப்பு பணிகள் செய்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லக்கூடிய எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயிலும், மதுரை செல்லக்கூடிய ரயிலும் அக்காள்மடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் திருச்சி மற்றும் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்ற ரயில்கள், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்ததால் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின் பாலம் சரி செய்யப்பட்ட பிறகு ரயில்கள் இயக்கப்பட்டது.
Next Story
