போக்சோவில் கைதான மதபோதகர்.. "வழக்கில் அரசியல் தலையீடு உள்ளது" - திரண்ட கூட்டம்

x

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ் மீதான வழக்கை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர் முன்னேற்ற இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். ஜான் ஜெபராஜ் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும், இதன் பின்னணியில் அரசியல் தூண்டுதல் இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், வருகிற 25 ஆம் தேதி ஜான் ஜெபராஜ்க்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் மனுக்கொடுத்துள்ளனர். அனுமதி மறுத்தால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்