

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும் பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.