TN Rain | விடாமல் வெளுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
விடாமல் வெளுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
TN Rain | விடாமல் வெளுத்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
#kannyakumari #rain #rainfall #thanthitv
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட ஏலாக்கரை, வலிய ஏலா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வாளிகளில் இறைத்து வெளியேற்றி வருகின்றனர். வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே, மழைநீர் வடிகால் ஓடைகளில் அடைப்புகள் உள்ளனவா என நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
