வீட்டை பறித்த உறவினர்கள் - வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி
- மதுரை விக்கிரமங்கலம் அருகே வயதான தம்பதி சாலையின் நடுவே அமர்ந்து தீயிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கிழபெருமாள்பட்டியை சேர்ந்தவர்கள் மாயி- இருளாயி தம்பதி. வயதான இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், புதிதாக ஒரு வீட்டை கட்டி அதில் குடியிருந்து வந்தனர்.
- இந்த நிலையில், இவர்களது வீட்டை உறவினர்கள் விருமாண்டி, கார்த்திகா, தனராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து ஆக்கிரமித்துள்ளனர்.
- மேலும் வயதான தம்பதியை அடித்து விரட்டியுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இருவரும், உசிலம்பட்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- மேலும் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார்,
- தம்பதியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
