Land Registration| லஞ்ச பணத்தை வாங்கிய மறுநொடியே சார்பதிவாளர் கைது - பத்திர ஆபீஸில் தரமான சம்பவம்
லஞ்ச பணத்தை வாங்கிய மறுநொடியே சார்பதிவாளர் கைது - பத்திர ஆபீஸில் தரமான சம்பவம்
ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், பத்திர எழுத்தர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, நிலப் பதிவு செய்ய விவசாயியிடம் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவசாயி கார்த்தி, 3 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை பதிவு செய்ய சென்றபோது, சார்பதிவாளர் சங்கர் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பத்திர எழுத்தர் வெற்றியிடம் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து கார்த்தி அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கினர். அவற்றை பத்திர எழுத்தர் வெற்றியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் சார்பதிவாளர், பத்திர எழுத்தரை கையும் களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர்...
