காத்துகிடந்த மக்கள் - அழைப்பு விடுத்துவிட்டு விடுமுறை அறிவித்த பாஸ்போர்ட் அலுவலகம்...

சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு, திடீரென விடுமுறை அறிவித்த‌தால், பாஸ்போர்ட் காத்துக்கிடந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதற்காக, பண்டிகை தினத்திலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 க்கும் மேற்பட்டோர் காலை முதலே சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்துக்கிடந்தனர். இந்நிலையில், 11 மணியளவில் திடீரென இன்று அலுவலகம் விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த மக்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால், வெளி நாடுகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.


X

Thanthi TV
www.thanthitv.com