ரீல்ஸ் மோகம்.. இளைஞர்கள் பைக் சாகசம் - சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஏற்காட்டில், சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக்கில் சாகசங்களில் ஈடுபட்டு, அதைப் பதிவுசெய்து ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். அதிலும், நெடுஞ்சாலைத்துறையின் எச்சரிக்கை பலகைகளை அகற்றி விளையாடிய இந்த இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story
