ரீல்ஸ் வெறி... ஏற்காட்டை பரபரக்க வைத்த பைக்கர்ஸ்-அடியோடு மாறி அடுத்த வைரல் வீடியோ

x

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் வாகனத்தை அதிவேகமாக இயக்கியும், சாலையோரத்தில் இருந்த எச்சரிக்கை பலகையை உடைத்தும் பொதுமக்களை அச்சுறுத்தினர். இதனை ரீல்ஸ் செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலானது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்த 5 இளைஞர்களை கைது செய்த போலீசார், உரிய அறிவுரைகள் வழங்கி பிணையில் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்