Red Alert-ல் நீலகிரி.. சுழற்றியடித்த சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்
Nilgiris || Red Alert-ல் நீலகிரி.. சுழற்றியடித்த சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்
மாமரம் கிராமத்திலிருந்து ஜக்கணாரை செல்லும் கிராமத்தில் சூறாவளி காற்றுக்கு ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.
சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை கொட்டும் மழை என்றும் பாராமல் பழங்குடியின கிராம மக்களே வெட்டி அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி,மஞ்சூர், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. மழையி. காரணமாக பல பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்து. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மாமரம் கிராமத்திலிருந்து ஜக்கணாரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் பழமையான ராட்சதமரம் உயிரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பழங்குடியின கிராம மக்கள் ஈடுபட்டனர். மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இதனால் பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பாதிப்படைந்தனர்.
