பகவத்கீதை, யோகா, தத்துவவியல் - விருப்பப் பாடங்களாக அறிவிக்க பரிந்துரை

பகவத் கீதை, யோகா, தத்துவவியல் உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்க வில்லை என அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
பகவத்கீதை, யோகா, தத்துவவியல் - விருப்பப் பாடங்களாக அறிவிக்க பரிந்துரை
Published on
முதுகலை பொறியியல் படிப்பில் யோகா, தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட ஐந்து விருப்பப் பாடங்களை அறிமுகம் செய்யலாம் என இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த புதிய விருப்பப் பாடங்கள் தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழக வட்டாரத்தில் கேட்டபோது இதுவரை தங்களுக்கு நேரடியாக எந்தவிதமான பரிந்துரையும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மாணவர்கள் புதிய பாடத் திட்டங்களை சிரமப்பட்டு படித்து வருவதாகவும் இந்த நேரத்தில் கூடுதலாக விருப்பப் பாடங்களையும் திணிப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை மத்திய அரசின் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com