Villupuram | கைரேகை பார்த்து கைவரிசை - ஜோசியம் பார்ப்பது போல் நடித்து நைசாக வேலை காட்டிய நபர்..

கைரேகை பார்த்து கைவரிசை - ஜோசியம் பார்ப்பது போல் நடித்து நைசாக வேலை காட்டிய நபர்..

Villupuram | கைரேகை பார்த்து கைவரிசை - ஜோசியம் பார்ப்பது போல் நடித்து நைசாக வேலை காட்டிய நபர்.. சிசிடிவி காட்சிகள் வைரல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஜோசியம் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், சுமார் 250 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமன் கோவில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில் முருகனின் வீட்டில், அவரது மனைவி தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். தொடர்ந்து, கைரேகை பார்த்து ஜோசியம் கூறுவதாகவும், பரிகாரம் செய்வதாகவும் கூறி அவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் ஜோசியம் பார்ப்பது போல் நடித்து, வீட்டில் இருந்த கொலுசு, மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட சுமார் 250 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com