மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி

ராமேஸ்வரம் தீவுக்குள் குட்டி சிங்கப்பூராக இருந்த தனுஷ்கோடி, மீண்டும் தூங்கா நகரமாக மாறி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

உயர எழும் அலையும், கடலின் தூய்மையும், அவர்களை ஆராதிக்கின்றன. எச்சமாக நின்று வரலாறு சொல்லும் தேவாலயம், ரயில் நிலையம், அஞ்சலகம், உருக்குலைந்த மாளிகைகளின் எச்ச​ங்களை பார்த்து வியக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

புயலின் போது சென்ற ரயில், அதில் சென்ற பயணிகளின் நிலை இன்றுவரை யாரும் அறியாதது. கால ஓட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தனுஷ்கோடி மூலம் பொருள் விற்பனையிலும், பிறமொழி கற்றலும் நடைபெறுகிறது. மின்வசதி, கழிவறை, புதிய வீடுகள் கட்டுதல் போன்றவை தேவையாக இருக்கிறது முந்தைய குட்டி சிங்கப்பூருக்கு....

X

Thanthi TV
www.thanthitv.com