8 வழிச்சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு : "அது சூப்பர் சாலையாக இருக்கும்" - உதயகுமார்

அதிமுகவின் சாதனை விளக்க சைக்கிள் பயணத்தை மதுரையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கிவைத்தார்.
8 வழிச்சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு : "அது சூப்பர் சாலையாக இருக்கும்" - உதயகுமார்
Published on
அதிமுகவின் சாதனை விளக்க சைக்கிள் பயணத்தை மதுரையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கிவைத்தார். மதுரை பாண்டி கோவில் இருந்து, ஒத்தக்கடை வழியாக பல்வேறு கிராமங்களுக்குள் சென்று, இன்று மாலை மேலூரை அடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், தொடர்ந்து 5 நாட்கள் பேரணி நடக்கிறது. பேரணியை தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்திருப்பதால், அது சூப்பர் சாலையாக இருக்கும் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com