ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள இ சேவை மையத்தில், ஆதார் அட்டை பெற உரிய ஆவணங்களை சமர்பித்தார். அவருடைய பாதுகாப்புக்காக போலீசாரும் உடனிருந்தனர்.