"ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது" - மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது என மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
"ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது" - மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம்
Published on
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது என மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரவிச்சந்திரன் தாயாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், விருதுநகர் மாவட்டத்தில் காவலர் தகுதி தேர்வு நடந்து வருவதாலும் ரவிச்சந்திரனின் வீடு அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி எனவும் குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதாகவும், எனவே ரவிச்சந்திரனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரவிச்சந்திரன் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com