

நியாய விலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டு, போன்ற முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு முறையை மேம்படுத்தி குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமே பொருட்களை வாங்கும் விதமாக அட்டைதாரர் கைரேகை பதியும் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கைரேகைப் பதிவு தோல்வியடைந்தால், ஆதார் எண்ணுக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பொருட்களை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.