மலை தாண்டி வீடு தேடி வந்த ரேசன் பொருட்கள்.."எங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு"
தாயுமானவர் திட்டம்-வீடு தேடி வரும் ரேசன் பொருட்களால் மக்கள் மகிழ்ச்சி
தாயுமானவர் திட்டத்தால் அதிகாரிகளே வீட்டிற்கு வந்து ரேசன் பொருட்களை வழங்குவது பெரும் உதவியாக இருப்பதாக மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரியில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களை கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொது மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர். இதற்கு இருளர் பழங்குடி இன மக்கள் வரவேற்பு தெரிவித்ததுடன் செலவு குறைந்து இருப்பதாகவும் வயதான மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பெரும் உதவியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Next Story
