சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக கிடந்த ரேஷன் அரிசி - அதிர்ந்து போன மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சுடுகாட்டு பகுதியில் கடத்தலுக்காக பதுக்க வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, சுடுகாட்டில் மறைவான பகுதியில் ஐந்து மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
