கொதித்துப் போய் கடை முன் குவிந்த மக்கள் - இரவு 10 மணியை கடந்தும் ரேஷன் விநியோகம்
குமரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமையல் எண்ணெய் இந்த மாதத்தில் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குடோனில் இருந்து ரேஷன் கடைக்கு சமையல் எண்ணெய் வந்ததையடுத்து, தகவலறிந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு குவிந்து எண்ணெய் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விற்பனையாளர் எண்ணெய் விநியோகத்தை தொடங்கிய நிலையில் இரவு 10 மணியை கடந்தும் நீடித்தது. இதனை கண்டித்து விற்பனையாளரின் மகன்கள் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
