

தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காதொலி கருவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணி நிறைவடைந்துவிட்டதாக கூறினார்.