Rash Driving| ஃபுல் மப்பில் `படம்’ காட்டிய காலேஜ் 2nd Year பாய்ஸ் - தக்க `பாடம்’ புகட்டிய பப்ளிக்
Rash Driving| ஃபுல் மப்பில் `படம்’ காட்டிய காலேஜ் 2nd Year பாய்ஸ் - தக்க `பாடம்’ புகட்டிய பப்ளிக்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் வேகமாக வந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் முதன்மைச் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள ஒருவழிப்பாதையில், கிணத்துக்காடு பகுதியில் இருந்து கார் ஒன்று எதிர்திசையில் வேகமாக வந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனம் மீது கார் லேசாக மோதியதில், அதன் ஓட்டுநர் கீழே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காரையும் அதிலிருந்த இளைஞர்களையும் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், இளைஞர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர்கள் ஈரோடு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்பதும், மது போதையில் காரை இயக்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
