ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கூகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனுஷ்கோடி முந்திராயர் சத்திரம் பகுதியில், குடிசை மீது காய வைக்கப்பட்டிந்த மீன்பிடி வலையில், சிக்கிய அரிய வகை ஆந்தையை கண்ட மீனவர்கள், அதை மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்குபின் ஆந்தை வனத்தில் விடப்பட்டது.