MBBS கவுன்சிலிங்கில் அபூர்வ நிகழ்வு - ஒரே நேரத்தில் தாய், மகளுக்கு அடித்த ஜாக்பாட்

x

சென்னையில் நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட, தாய் மற்றும் மகள் இருவருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் அமுதவல்லி. மாற்றுத்திறனாளியான இவர், பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய அமுதவல்லி, 147 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இடம்கிடைத்துள்ளது. இவரது மகள் சம்யுக்தா கிருபாலினி நீட் தேர்வில் 480 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில்,பொதுப்பிரிவில் ஆன்லைன் வழி கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ளார் இந்த நிலையில், தாய் அமுதவல்லி தன்னை வெற்றி பெறச் செய்த மகளிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்