கஷ்டத்தில் உதவிய புரோகிதருக்கு விபூதியடித்த ரேபிடோ டிரைவர் - சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் மயக்கமடைந்தது போல் நடித்து புரோகிதரிடம் நகையை திருடிச் சென்ற ரேபிடோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் புரோகிதரான 61 வயது முதியவர் அனில் குமார். இவர் ரேபிடோவில் பயணித்ததன் மூலம் ரேபிடோ ஓட்டுனர் டேவிட் இளவரசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து டேவிட் இளவரசன் கஷ்டத்தில் உள்ளதை அறிந்து, தனது வீட்டில் உள்ள பழைய துணிகளை வேண்டுமானால் வந்து எடுத்துக்கொள் என கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு நண்பருடன் வந்த ரேபிடோ ஓட்டுனர் மயக்கம் வந்தது போல் நடித்து, புரோகிதரிடன் இருந்து நகையை திருடி சென்றுள்ளார். நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த புரோகிதர் போலீசில் புகாரளித்த நிலையில், ரேபிடோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர் கங்காதரனை தேடி வருகின்றனர்.
Next Story
