கடகடவென ஏறிய நீர்மட்டம் - கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணை.. கண்கொள்ளா காட்சி..!

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு ஆயிரத்து 524 கனஅடியாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்