பலாத்காரம்... கருக்கலைப்பு... மாணவி பலி... பேராசிரியர் கைது

x

செங்கல்பட்டு அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தமிழ்நாடு உடற் கல்வியியல் கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ராஜேஷ் குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்ப்பமான மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடல் நிலை மோசமானது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாழம்பூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உதவி பேராசிரியர் ராஜேஷ் குமாரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்