"என்ன கொடுமை இது.." - தூங்காமல் படித்த மாணவி.. தேர்வெழுதும் போதே நேர்ந்த விபரீதம்

x

புவனகிரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி திடீரென மயக்கமானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு பரீட்சைக்கு வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவி இரவு முழுவதும் கண்விழித்து படித்த நிலையில், காலை உணவு உட்கொள்ளாமல் பரீட்சைக்கு வந்ததே மயக்கத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்