இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி மருத்துவச் சான்று

ராணிப்பேட்டை அருகே இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலியாக மருத்துவசான்று பெற்று பஞ்சமி நிலத்தை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி மருத்துவச் சான்று
Published on

ராணிப்பேட்டை அருகே இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலியாக மருத்துவசான்று பெற்று பஞ்சமி நிலத்தை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மற்றும் கிரேஸ் ஆகிய இருவரும் 2007ல் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான பஞ்சமி விளை நிலத்தை போலியாக சான்று கொடுத்து முறைகேடாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான மனு வட்டாட்சியர் இளஞ்செழியனிடம் வந்த போது சந்தேகமடைந்து ஆவணங்களை சரிபார்த்த போது உண்மை தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் வட்டாட்சியர், புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com