Ranipet | Death | வேகத்தடையில் ஏறி இறங்கிய போது ஏற்பட்ட சோகம்.. சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி..

x

கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் - 6 வயது சிறுவன் பலி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டையில் இருசக்கர வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் வாகனத்தில் சென்ற 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினரோடு கடைக்கு சென்று வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக வேகத்தடை மீது ஏறி இறங்கிய வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்