Ranipet | 4 பைக்குகளை தட்டி சிதறவிட்டு ஒரு பைக்கை மட்டும் 1 கிமீ தூக்கி சென்ற கார்...
Ranipet | 4 பைக்குகளை தட்டி சிதறவிட்டு ஒரு பைக்கை மட்டும் 1 கிமீ தூக்கி சென்ற கார்...
பைக்கை இழுத்துச் சென்ற கார் - ஓட்டுநர் மீது வழக்கு
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடியில் பைக்கை கார் ஒன்று இழுத்துச் சென்ற சம்பவத்தில், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலாஜா சுங்கச்சாவடி அருகே கார் ஒன்று அடுத்தடுத்து 4 பைக்குகளில் மோதியுள்ளது. அதில், ஒரு பைக் மட்டும் முன்பகுதியில் சிக்கிய நிலையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பைக் இழுத்துசெல்லப்பட்டது. இச்சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே, காரை ஓட்டி வந்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் வினோத் என்பவர் மீது அஜாக்கிரதையாக ஓட்டி காயம் ஏற்படுத்தியதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
