Ranipet | ATM Robbery | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக வெட்டி எடுத்து கொள்ளை | ஆற்காட்டில் துணிகரம்

ஆற்காட்டில் ஏடிஎம்-ஐ வெல்டிங் மெஷினால் உடைத்து கொள்ளை கொள்ளைச் சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே முள்வாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாக ஏடிஎம் மையத்தில், பூட்டை உடைத்து நுழைந்த மர்ம கும்பல், வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் மிஷினை துண்டு துண்டாக வெட்டி எடுத்து அதிலிருந்த 7 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. பழுது காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பூட்டப்பட்டிருந்த இந்த ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமராக்களில் கருப்பு மை பூசி இக்கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மாவட்ட எல்லை சோதனைச் சாவடி மற்றும் கல்லூரி காவலாளி அருகிலேயே இருந்தும் இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் சரக டி.ஐ.ஜி மகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் வேலூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை முயற்சிக்கும் இதற்கும் தொடர்புள்ளதா, இதில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டி.ஐ.ஜி மகேஷ் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com