குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி அறிவிப்பு

x

புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை, ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 13 ஆயிரத்து 600 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மாதந்தோறும் 2 கிலோ இலவச கோதுமை, கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ஊக்கத்தொகை போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்