ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி, சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் .இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,
பிஎன் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், மதரீதியான வழிபாடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.