Ramraj Cotton | ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் திறப்பு விழா - படையெடுத்த VIP-க்கள்

கோவையில் ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது...கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டது. கல்வியாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன், நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் எஸ்.அஸ்வின், ஹீரோ பேஷன் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கோவையைச் சேர்ந்த எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆடைகளை வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

X

Thanthi TV
www.thanthitv.com