"ஆச்சார்யா பஞ்சகச்சம்" வேட்டியை பிரபலப்படுத்தும் `ராம்ராஜ் காட்டன்'

x

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டியின் விளம்பரத் தூதராக கலாச்சார வல்லுநரான துஷ்யந்த் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பாரம்பரியத்தையும் தொலைநோக்கு சிந்தனையையும் ஒருங்கிணைக்கும் இத்தருணத்தில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஒரு முக்கியமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம், புகழ்பெற்ற அறிஞரும் கலாச்சார வல்லுநருமான துஷ்யந்த் ஸ்ரீதருடன் இணைந்து, தனது ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டியை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யா பஞ்சகச்சம் வேஷ்டி, ஆன்மிக பாரம்பரியம் மற்றும் இந்திய கலாச்சார அடையாளத்தின் கலவையாகும் என்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அதில் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்