பெண் தாசில்தாருக்கு VAO கொலை மிரட்டல் - அதிர்ச்சி | ramnathapuram

x

பெண் தாசில்தார் மற்றும் பெண் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விஏஓ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தாசில்தாராக பணிபுரிந்து வரும் சாந்தி, விஏஓ ஆக பணிபுரியும் யூனிஸ் இடையே அலுவல் ரீதியாக பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் , விஏஓ யூனுஸ் தாசில்தார் சாந்தி மற்றும் பெண் அலுவலர்களிடம் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார். இதனையடுத்து தாசில்தார் அளித்த புகாரின் பேரில் விஏஓ யூனுஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்