Rameswaram | கொந்தளித்த கடல்.. வெளுத்தெடுத்த கனமழை - அப்படியே சரிந்து விழுந்த வீடு, மரங்கள்
ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன்கோட்டையில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரம் இருந்த ஜோசப் என்பவரது வீடு மற்றும் மரங்கள் சரிந்து கீழே விழுந்தது. மேலும், பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உடனடி நடவடிக்கையாக தமிழக அரசு தடுப்புச் சுவர் மற்றும் துறைமுகம் அமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
