ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றம் வீசிய கடல்பாசி மற்றும் குப்பைகளை வடமாநில பக்தர்கள் அகற்றினர். குஜராத், மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த 800க்கும் மேற்பட்டோர் காந்தி ஜெயந்தியையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் மிதந்த குப்பைகளை பைகளில் அள்ளி நகராட்சி வாகனங்கள் மூலம் அவற்றை அனுப்பி வைத்தனர்.