ஏ.டி.எம். மையத்தில் பணத்தை தவற விட்ட மீனவர் : பணத்தை மீனவரிடம் கொண்டு சேர்த்த காவலர்

ராமேஸ்வரத்தில் மீனவர் ஒருவர் ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட பணத்தை, அவரிடம் கொண்டு சேர்த்த காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஏ.டி.எம். மையத்தில் பணத்தை தவற விட்ட மீனவர் : பணத்தை மீனவரிடம் கொண்டு சேர்த்த காவலர்
Published on
ராமேஸ்வரத்தில் மீனவர் ஒருவர் ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட பணத்தை, அவரிடம் கொண்டு சேர்த்த காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ராமேஸ்வரம் மேலத்தெருவில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் மீனவரான ஜெகன் என்பவர் 10 ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் இயந்திரத்தில் பணம் வராத‌தை அடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து ராமேஸ்வரம் கோவில் தனிப்பிரிவு தலைமை காவலர் மாணிக்கம், பணம் எடுக்க வந்த போது, பத்தாயிரம் ரூபாய் இருப்பதை கண்டு அதனை வங்கியில் ஒப்படைத்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வங்கி ஊழியர்கள் பணத்தை மீனவர் ஜெகனிடம் ஒப்படைத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com