சார்பு ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி - கடத்தல் கும்பலுக்கு வலை

ராமேஸ்வரத்தில் மதுபாட்டில் கடத்தலை தடுக்க முயன்ற சார்பு ஆய்வாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளது.
சார்பு ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி - கடத்தல் கும்பலுக்கு வலை
Published on

ராமேஸ்வரத்தில் மதுபாட்டில் கடத்தலை தடுக்க முயன்ற சார்பு ஆய்வாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளது. முன்னதாக, இரண்டு கார்களில் மதுபாட்டில் கடத்தி வருவதாக ராமேஸ்வரம் டவுன் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைக்க, போலீசார் பேருந்து நிலையம் அருகே ஒரு காரை மடக்கி பிடித்தனர். இதனிடையே, தப்பியோடிய மற்றொரு காரை, தனது இருசக்கர வாகனத்தில், மடக்கி பிடிக்க முயன்ற தங்கச்சிமடம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராபீனின் மீது காரை ஏற்றியதால், அவர், படுகாயமடைந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com