19 தீவிரவாதிகள் ஊடுருவல் என தகவல் - விடுதிகளில் போலீசார் விடிய விடிய சோதனை

ராமேஸ்வரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலாலும், அங்குள்ள விடுதிகளில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
19 தீவிரவாதிகள் ஊடுருவல் என தகவல் - விடுதிகளில் போலீசார் விடிய விடிய சோதனை
Published on

ராமேஸ்வரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலாலும், அங்குள்ள விடுதிகளில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர். பாம்பனில், சாலை மற்றும் ரயில்வே பாலங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில், விடுதி, உணவகங்களிலும் விடிய விடிய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முழு முகவரி மற்றும் ஆதாரம் இல்லாமல் எந்த நபருக்கும் அறைகள் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்திய போலீசார், தனி நபருக்கு அறை வழங்கவே கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் ராமேஸ்வரம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com