Rameshwaram Temple Viral Video| ராமேஸ்வரம் கோவிலுக்குள் அசைவ உணவா? - வெடித்த சர்ச்சை
Rameshwaram Temple Viral Video| ராமேஸ்வரம் கோவிலுக்குள் அசைவ உணவா? - வெடித்த சர்ச்சை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் அசைவ உணவா? உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்திற்குள் உள்ள அலுவலகத்தில், கோவில் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாகவும், அதே நேரத்தில் அசைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிகழ்வு இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதியானால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
