

மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் டன் கணக்கில் மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பாம்பன் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்று அதிகளவில் மீன் பிடித்து வந்தனர். மீன்களில் ரசாயனம் கலக்கப்பதாக தகவல் நிலவி வரும் நிலையில் கேரளாவில் இருந்து வியாபாரிகள் வராததால், பாம்பன் துறைமுகத்தில் டன் கணக்கில் மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.