Ramanathapuram வாய் பிளக்க வைத்த `பொம்மலாட்டம்’ - மொத்த கூட்டத்தையும் கட்டிப்போட்ட நம் பாரம்பரிய கலை
பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை பொம்மலாட்டம் கலையை அழியாமல் பாதுகாக்க இளைஞர்கள் முன்வரவும், பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் நிகழ்த்தப்பட்ட பொம்மலாட்டம் மக்களை வெகுவாக ஈர்ந்தது. இதுகுறித்து தந்தி டிவியிடம் பேசிய பொம்மலாட்ட கலைஞரும் மெக்கானிக்கல் இன்ஜினியரான சஞ்சய் ஸ்ரீ, பாரம்பரிய கலைகள் அழிந்துவரக்கூடிய நிலையில், செல்போன் மற்றும் DJ மோகத்தில் மூழ்கிய இளைஞர்கள் பொம்மலாட்டக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
