மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! ஆசிரியர் மீது பாய்ந்த வழக்கு | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதுகலை விலங்கியல் ஆசிரியராக பணிபுரியும் வெங்கடேசன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com