Ramanathapuram | Protest | பெண் உயிரிழந்த விவகாரம் | ஹாஸ்பிடலை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

பெண் உயிரிழந்த விவகாரம் | ஹாஸ்பிடலை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Summary

மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழப்பு என புகார் ராமநாதபுரத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த‌தாக கூறி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட‌து. ராமநாதபுரத்தை அடுத்த பால்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவருக்கு மூக்கில் பிரச்சினை இருப்பதாக கூறி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாக தெரிகிறது. அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து உடல்நிலை மோசமாகி கவலைக்கிடமான நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . உயிரிழந்த தமிழ் செல்வியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com